×

எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன் : தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி!!

டெல்லி: பிரதமர் மோடி தனது டீப் ஃபேக் வீடியோவை எக்ஸ் தளத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து தான் மிகவும் மகிழ்ந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.தேர்தல் நேரம் என்பதால் அரசியல் தலைவர்கள் தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற இரண்டு மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரின் தனித்தனி மீம்ஸ் நடனம் (டான்ஸ்) பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது. அதாவது மாஸ் என்ட்ரி கொடுத்து திறந்த மேடையில் டான்ஸ் ஆடுவது பிரமிப்பாக இருந்தது. இந்த மீம்ஸ் வீடியோவை கிருஷ்ணா என்பவர் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ‘இந்த வீடியோவை வெளியிடுகிறேன். சர்வாதிகாரி என்னைக் கைது செய்ய மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் மேற்குவங்க சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட பதிவில், ‘இந்த மீம்ஸ் வீடியோவை வெளியிட்டவரின் பெயர், முகவரியை வெளியிடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மோடி, மம்தா தொடர்பான மீம்ஸ் வீடியோவை ரசித்தும், கண்டித்தும் பலரும் பலவித கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீடியோவை டேக் செய்த பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன். தேர்தல் நேரத்தில் இத்தகைய படைப்பாற்றல் மெய்யான மகிழ்ச்சியை தருகிறது”’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன் : தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,X ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...